விருந்து வைக்க வசதி இல்லை: திருமணம் செய்யாமல் மலைவாழ் மக்கள் செய்யும் காரியம்
இந்தியாவில் திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்களிடையே அதிகரித்துள்ளது.
பழங்காலத்திலேயே திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் வாழ்ந்து வரும் நிலையில், இதனை மைத்திரி கறார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
இந்து முறையிலான 8 திருமணங்களில் காந்தர்வ முறையும் ஒன்று. காந்தர்வ முறை திருமணம் என்பது, திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்தல் என்ற வேரிலிருந்து வந்தது. அத்தகைய திருமண முறை ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆதிவாசி மக்களிடையே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த திருமணத்தை துகு திருமணம் என்று அழைக்கின்றனர். குழந்தைகள் பிறப்புக்குப் பின்பும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முறை இங்கு அங்கீகரிக்கப்படுகிறது.
வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக ஆணாதிக்க பழங்குடி சமூகங்களில் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் இது போன்ற திருமண முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும், திருமணம் நடத்தி விருந்து வைப்பதற்கு வசதி இல்லாததால், ஜார்க்கண்டின் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழும் முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கூறுகையில், “கடந்த 3 தலைமுறைகளாக இந்த மக்கள் யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணம் செய்து கொள்வதற்கான பணம் இல்லாததாலேயே இந்த முறையைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் பேரன்களின் திருமணத்தைக் கூட தாத்தாக்கள் அனுமதிப்பதில்லை. இன்றைக்கும் ஒப்பந்தம் செய்துகொண்டு திருமணம் செய்யாமலேயே வாழ்கின்றனர்.
இதில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதுடன், மனைவி என்ற சட்ட அங்கீகாரம் இல்லாமல் கணவரின் மூதாதையர் சொத்துக்களை சட்டப்படி பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.
70 வயதுள்ள ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் பல ஆண்டுகள் தன் வயதுடைய பெண்ணுடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு சட்டப்படி திருமணம் செய்து வைத்துள்ளார்.
தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்ள உதவி செய்து வருகிறேன். அதற்காக பெரிய அளவில் திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் குறித்த ஆர்வலர் கூறியுள்ளார்.
