உயிருக்கு எமனாகும் குடிப்பழக்கம்: அலட்சியம் வேண்டாம்
ஒரு மனிதன் அளவுக்கு அதிகமாக மது குடித்தால் அவன் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடும். எதையும் அளவாக குடித்தால் உடலுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அப்படி அளவுக்கு அதிகமாக குடித்தால்தான் கல்லீரல் நோய் அழற்சி நோய் வந்துவிடும்.
இன்றைய காலக்கட்டத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இரவு நேரத்தில் சிறிதாக மது அருந்தினால் அது செரிமானத்திற்கு நல்லது. ஆனால் அளவுக்கு மீறினால்தான் ஆபத்து ஏற்படும்.
அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் ஏற்பட்டால் எப்படிப்பட்ட விளைவுகளை கொடுக்கும் என்று பார்ப்போம் -
1. மதுபானம் அளவுக்கு அதிகமாக குடித்தால் ஆண்களை விட பெண்களை தான் அதிகமாக பாதிப்பதாக கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஆரம்பத்தில் மதுபானம் குடித்தால் முதலில் செரிமானப் பிரச்சினை ஏற்படும். அதன் பின்னர், அடி வயிற்றில் வலி உண்டாகும். பிறகு, அஜீரணக் கோளாறு ஏற்படும்.
3. அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் ரத்த அழுத்தத்தை பாதித்து உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கிவிடும். அதோடு, கணையத்தை பாதித்துவிடும்.
4. அளவுக்கு அதிகமான மது அருந்தினால் அடிக்கடி வாந்தி ஏற்படும்.
5. தினமும் மது அருந்தினால் கல்லீரல் வீக்க நோய் ஏற்பட்டுவிடும். இது கல்லீரலில் வீக்கத்தையும், காயத்தையும் ஏற்படுத்திவிடும். பின்னர், உயிருக்கு உலை வைத்துவிடும்.
6. நீண்ட காலமாக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஹெபடைடிஸ் மற்றும் அழற்சி நோய் ஏற்பட்டு விடும்.
7. அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் இருந்தால் மஞ்சள் காமாலை, பாதங்களில் வீக்கம், வயிறு உப்புசம், குடலில் ரத்தப்போக்கு, மலத்தில் ரத்தம் போன்றவற்றை உண்டாக்கிவிடும். ஆதலால், மதுவை அளவோடு குடித்து வந்தால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |