Liver Damage: உடல் செயற்பாட்டிற்கு அவசியமான கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்ன ?
நாம் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியமான உணவுகளை உண்பது அவசியம். நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும் போது தான் நமது உடல் பாகங்களும் பாதுகாப்பாக இருக்கும்.
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல.
சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது.
கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இது உடலின் உறுப்பு என்பதால் இதன் ஆரோக்கியத்தில் யாரும் கவனம் எடுத்துக்கொள்வது குறைவு.இது பாதிக்கப்பட்டால் உடலில் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கல்லீரல்
இன்றைய ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் பாதிப்படைகின்றது. இதற்கு தொடர்ச்சியாக ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது, சில நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக அதிக அளவு மருந்துகளை உட்கொள்வது ஆகியவற்றின் காரணமாக, கல்லீரல் வேகமாக பாதிக்கப்படுகின்றது.
கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகளை அடையாளம் காண்பது கடினமாகும். எனினும், கல்லிரலின் நிலை மோசமாகும் போது, உடலில் சில மாற்றங்கள் ஏற்படத் தொடங்குகின்றன. கல்லலீரல்
நோய்க்கான காரணங்கள்
இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணமாக காணப்படுவது ஹெபடைடிஸ் வைரஸ் ஆகும். இது ஒரு வகை நுண்ணங்கி இது தவறான உணவு பழக்க வழக்கத்தால் வரும். நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் இந்த நோய் வரும் இது சிலருக்கு மரபியலாகவும் இருக்கிக்கிறது.
அதாவது ஆட்டோ இம்யூன் ஹெபடைடிஸ், முதன்மை பிலியரி சிரோசிஸ் என்பதாகும். உடலில் புற்றுநோய் அல்லது பிற கல வளர்ச்சி என்பவை இருந்தால் அது இந்த கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கும்.
இது தவிர தொடர்ந்து மதுபானம் அருந்திக்கொண்டு இருந்தால் இது காலப்போக்கில் அழுகி விடும். கல்லீரலில் கொழுப்பு சேர்வது இதற்கு ஒரு முக்கிய காரணியாகும்.
இந்த நோய் யாருக்கு வரும்?
நாளுக்கு நாள் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்பவர்களுக்கு இந்த நோய் வரும். இது தவிர ஊசி போடுவதற்கான பகிரப்பட்ட ஊசிகள் (போதை மருந்து துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு பொதுவாக வரும்.
உடலில் கிருமி நீக்காத ஊசிகளால் துளையிடுதல் அதாவது பச்சை குத்துபவர்களுக்கு இது வரும். பாதுகாப்பற்ற முறையில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நோய் வரும்.
உடலில் ஏற்கனவே நீரிழிவு மற்றும் உடல் பருமன் அதிகமாக இருந்தாலும் இது வரும். இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த நோய் கண்டிப்பாக வரும்.
இதன் ஆரம்ப அறிகுறிகள்
இரத்தத்தில் பித்தம் உருவாவது கல்லீரல் சேதமடைவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். இவ்வாறு நிகழும் பொழுது சருமத்தில் அரிப்பும் ஏற்பட தொடங்குகிறது. சருமத்தில் சிலந்தி கட்டி வருதல் இவை சருமத்தின் கீழ்பகுதியில் அமைந்துள்ள சிலந்தி வலைகள் போன்ற சிறிய செல்களாகும்.
உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரிக்கும்போது இவை வெளிப்படுகின்றன. இது போன்ற சிலந்தி கட்டிகள் உடலில் தென்பட்டால் அவை கல்லீரல் சரியாக செயல்படவில்லை என்பதை காட்டுகின்றன.
மேலும் ஹார்மோன்கள் வளர்ச்சிதை மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் உணர்த்துகிறது. சிறிய காயத்திற்கும் அதிக ரத்தபோக்கு இருந்தால் அது கல்லீரலின் பாதிப்பாகும்.
இது கல்லீரல் பழுதடைந்துள்ளதை உணர்த்துகிறது. இது இரத்தம் உறைவதை தடுக்க தேவையான அளவு புரதங்கள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படவில்லை என்பதை இது குறிக்கிறது.
கல்லீரலில் அழற்சி ஏற்படும் பொழுது வாயில் பழம் அல்லது அழுகிய கெட்ட துர்நாற்றம் வீசும். இது கல்லீரலின் பாதிப்பாகவும் இருக்கக்கூடும். சருமத்தில் திடீரென சுருக்கங்கள் ஏற்பட்டால் அதற்கு காரணம் ல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
கல்லீரல் சரியாக செயல்பட தவறினால் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் அதிகரிக்கும். இதனால் உடலில் மெலனின் உற்பத்தியும் அதிகரிக்கிறது. இதனால் முகத்தில் கருந்திட்டுக்கள் ஏற்படும்.
உள்ளங்கையில் எரிச்சல் சிவத்தல் அல்லது அரிப்பு ஏற்படுவதும் கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாகும். இந்நிலையை பால்மர் எரித்மா என்று அழைக்கிறார்கள். இது உடலில் ஏற்படும் அசாதாரண ஹார்மோன் அளவுகளால் ஏற்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |