டிராமா இனி பலிக்காது....பிரியங்காவை கிழித்து தொங்க விட்ட கமல்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று பிரியங்கா மற்றும் தாமரை ஆகிய இருவரையும் உலகநாயகன் கமல் வெளுத்து வாங்கியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஏகப்பட்ட விதிமீறல்களும் பொய்களையும் பேசி ரசிகர்களை வெறுப்படைய செய்துள்ளதாக பிரியங்கா ஆர்மியும் தாமரை ஆர்மியும் தனித்தனியாக பட்டியல் போட்டு கழுவி ஊற்றி வருகிறது.
இந்த வாரம் முட்டை உடைக்கும் டாஸ்க்கில் தாமரை மற்றும் பிரியங்கா போட்ட வரம்பு மீறிய சண்டை பிக் பாஸ் ரசிகர்களை கடுப்பாக்கியது.
என்ன தான் வெள்ளிக்கிழமை ராமசாமியாக பட்டைப் போட்டு தாமரையும், பவ்யமாக பிரியங்காவும் மாறினாலும் வாரம் முழுக்க அவங்க என்ன என்ன பண்ணாங்க எதற்காக திடீரென மாறினாங்க என்பதை அனைத்தையும் அலசி ஆராய்ந்து கமல் சிறப்பாக செய்துள்ளார்.
சாதாரணமாக தள்ளிவிடுவதில் தொடங்கி அடித்து தள்ளிவிடுவது என ரொம்பவே விதிமீறல்கள் பண்ணிட்டீங்க தாமரை என்றதும் நேற்று நட்பாக பழகியதை எல்லாம் மறந்து விட்டு முகத்தை பிரியங்காவை விட மோசமாக வைத்துக் கொண்டு விளக்கம் கொடுக்க தாமரை முன் வர விதிமீறல் தான் காரணம் என கமல் கண்டித்து விட்டார்.
பிரியங்கா தாமரையை பார்த்து தூ என துப்பியதை அவரே மறந்து துடைத்துப் போட்டு முத்தம் கொடுத்து நட்பாகி விட்ட நிலையில், மீண்டும் அதனை நினைவுபடுத்தி கமல் கொளுத்திப் போட்டார்.
கமல்ஹாசன் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா என பார்த்தால் இல்லை. அறிவுரையுடன் அந்த பிரச்சினை ஓய்ந்தது.
