இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த பாம்பு: பரபரப்பான திக் திக் நிமிடங்கள்
அமெரிக்காவில் இறந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த போது பாம்பு ஒன்று உயிருடன் இருந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் த்ரில் சம்பவம்
அமெரிக்காவின் மேரிலாண்டை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன்(வயது 31), கடந்த 9 ஆண்டுகளாக பிரேத பரிசோதனை செய்யும் வேலையை செய்து வருகிறார்.
இந்த வேலை தனக்கு மிகவும் பிடித்தது என கூறும் ஜெசிக்கா, தனக்கு நடந்த மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் கூறிய இந்த தகவல் படிக்கும் அனைவரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறையவைக்கிறது.
அதாவது, இறந்த நபரின் உடலில் இருந்து பாம்பு உயிருடன் கிடந்த செய்தி தான் அது.
பாம்பை பார்த்ததும் பதறியடித்துக்கொண்டு ஜெசிக்கா வெளியே வந்துள்ளார், அதன்பின்னர் பாம்பை பிடித்ததும் தன் வேலையை தொடர்ந்துள்ளார் ஜெசிக்கா.
இறந்தவரின் உடலில் பாம்பு வந்தது எப்படி?
இறந்தவரின் உடலில் இருந்து எப்படி பாம்பு உயிருடன் வந்திருக்கும் என பலருக்கும் குழப்பம் இருக்கலாம், இதற்கான விளக்கம் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவரின் உடலானது ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது, அவர் இறந்த பின்னர் பாம்பு உடலுக்குள் சென்றிருக்கலாம் என தெரிகிறது.
அது அப்படியே அவரது தொடையில் தங்கிவிட, பிரேத பரிசோதனை செய்த போது வெளியே வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களால் பயந்துபோன ஜெசிக்கா, குளிர்காலத்தில் உடலை சோதனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.