உலகையே திரும்பி பார்க்க வைத்த 8 வயது சிறுவன்! தற்போது எப்படியிருக்கிறார்?
உலகின் மிக வலிமையான சிறுவன் என புகழ்பெற்ற நபர், சாதாரண மனிதராக தற்போது ஹாலிவுட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம்.
உக்ரைனை சேர்ந்தவர் Richard Sandrak, 1992ம் ஆண்டு பிறந்த Richard Sandrak இளம் வயதில் இருந்தே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.
8 வயதிலேயே இளம் பாடி பில்டர்களை போன்று சிக்ஸ் பேக்ஸ், வலிமையான தசைகளுடன் வலம்வந்ததால் “உலகின் மிக வலிமையான சிறுவன்” என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
மேலும் தினமும் 7 லிருந்து 8 மணிநேர உடற்பயிற்சி, 600 புஷ்அப் என திடகாத்திரமான உடலுடன் வலம்வந்தார்.
தற்போது இவருக்கு 29 வயதாகும் நிலையில், சாதாரண இளைஞரை போன்று வலம்வந்து கொண்டிருக்கிறாராம்.
ஹாலிவுட்டில் பணியாற்றிவரும் Richard Sandrak, உடற்பயிற்சிகள் செய்து சலித்துப் போய்விட்டதாக தெரிவிக்கிறார்.
மேலும் முந்தைய கால வாழ்வை நினைத்து பெருமை கொள்வதாகவும், தற்போது உடற்பயிற்சி செய்வதில்லை எனவும் தெரிவிக்கிறார்.
Richard Sandrakக்கு நாசாவின் குவாண்டம் விஞ்ஞானியாக பணியாற்ற வேண்டும் என்பதே நீண்டகால கனவு எனவும் தெரிவித்துள்ளார்.