கண் தெரியாத பெற்றோருக்கு மகளின் பாசமான கவனிப்பு! கண்களை குளமாக்கும் வீடியோ
கடவுளின் அற்பத பரிசு குழந்தைகள் என்றால் அதுமிகையல்ல, பெற்றோரை பாசமாக அன்பாக அரவணைக்கும் குழந்தைகளின் செயல் நிச்சயம் நம்மை நெகிழ வைக்கும்.
சில நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ மில்லியன் கணக்கானவர்களின் இதயத்தை வென்றுள்ளது.
அந்த வீடியோவில், கண் தெரியாத பெற்றோரை செல்ல மகள் வழிநடத்தி செல்கிறாள்.
Mith Mumbaikar என்பவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், இதை முதன்முறையாக நான் பார்த்த போது கண்கலங்கிவிட்டேன்.
ஒவ்வொரு நாளும் அவர்கள் இங்கு வருகிறார்கள், தன் மகளின் கண்வழியே இந்த உலகத்தை காண்கிறார்கள்.
அந்த சின்னஞ்சிறு குழந்தை நமக்கு பல பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டாள்.
உங்களது பெற்றோரை விட யாரும் அன்பாக கவனித்துவிடமாட்டார்கள், எனவே நீங்கள் பாசமாக அவர்களை பார்த்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.