அருவியில் அடித்து செல்லப்பட்ட குழந்தை- நொடிப்பொழுதில் காப்பாற்றிய இளைஞர்! திக் திக் நிமிடங்கள்
தமிழகத்தின் குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
குற்றால அருவியில் குளியல்
தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றால அருவியில் பருவமழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
விடுமுறை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
இயற்கையின் அழகை ரசித்தபடி, குளியல் போடுவதே ஒரு சுகம் தானே!!
அடித்து செல்லப்பட்ட குழந்தை
இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக அருவியில் குழந்தை அடித்து செல்ல இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையுடன் பழைய குற்றாலம் அருவிக்கு வந்துள்ளார்.
அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தை தடாகத்தில் அடித்துச்செல்லப்பட்டது, தாயும் மற்றவர்களும் கூச்சலிட அங்கிருந்த இளைஞர் ஒருவர் சற்றும் யோசிக்காமல் குழந்தையை காப்பாற்ற ஓடினார்.
குழந்தை பாறையின் இடுக்கில் பிடித்துக்கொண்டு நிற்கு, அங்கு சென்று குழந்தையை காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்.
தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவனைக்கு அழைத்து சென்று குழந்தைக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.
குறித்த இளைஞருக்கு அனைவரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.