தான் பாசமாக வளர்த்த கோழிகளை பிராய்லருக்கு கொண்டு சென்றதால் கதறி அழுத சிறுவன்! நொடியில் ரவுடியாக மாறி மிரட்டும் காட்சி
தெற்கு சிக்கிமின் மெல்லி பகுதியைச் சேர்ந்த 6வது சிறுவன் ஒருவன் தான் வளர்த்த கோழிகளை பிராய்லருக்கு கொண்டு செல்ல வேண்டாம் என கதறி அழும் வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக அந்த பகுதிகளில் கோழிகள் வளர்ப்பது மிக முக்கியமான தொழிலாக உள்ளது. அப்படியாக அந்த சிறுவனின் தந்தையும் கோழிகளை வளர்த்துள்ளார். அந்த சிறுவனும் கோழிகளை பாசமாக பார்த்து வளர்த்து வந்துள்ளார்.
கோழிகள் வளர்ந்துபின்பு அதை பிராய்லர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம் அப்படியாக அவரது தந்தை அந்த கோழிகளை பிராய்லருக்கு விற்பனை செய்துள்ளார்.
அதை பிராய்லர்காரர்கள் வந்து எடுத்து செல்லும் போது அந்தசிறுவனம் அந்த கோழிகளை எடுத்து செல்ல வேண்டாம் என கதறி அழுதுள்ளான். அப்பொழுது அங்கிருந்தவர் தன் செல்போனில் எடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகியுள்ளது.