இளைஞரின் வயிற்றில் கொத்து கொத்தாக கிடந்த மர்ம பொருட்கள்.. ஸ்கேனை பார்த்து மிரண்டுபோன மருத்துவர்கள்
இளைஞர் ஒருவரின் வயிற்றில் ஒரு கிலோவுக்கு அதிகமான ஆணி, கம்பிகள் இருந்த சம்பவம் பெரும் மருத்துவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
லித்துவேனியா நாட்டில் இளைஞர் ஒருவர் கடுமையான வயிற்று வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரின் உடல்நிலையை பரிசோதனை செய்த போது தான் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்துள்ளது.
அப்போது, அந்த இளைஞரின் வயிற்று பகுதியில் கொத்து கொத்தாக இரும்பு பொருட்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த இளைஞரை கிளைபேடா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அந்த இளைஞரின் வயிற்றுப் பகுதியில் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஆணி, நட்டு, போல்டுகள், கத்திகள் இருந்து அவை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெரிவித்த, அறுவை சிகிச்சை வல்லுநர், இந்த இளைஞர் ஒரு வித்தியாசமான நபர், 3 மணி நேரம் நடத்தப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில், அவரது உடம்பில் சில 10 சென்டி மீட்டர் நீளமுள்ள உலக பொருட்கள் எல்லாம் உள்ளது என தெரிவிக்த்துள்ளார்.
அதிக குடிப்பழக்கம் உடைய தன்னுடைய குடிப்பழக்கத்தை விட்ட பிறகே இதுபோன்ற உலோகப் பொருள்கள் விழுங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
