2024 இல் திருமண பந்தத்தில் இணைந்த சினிமா பிரபலங்கள்... யார் யார்ன்னு தெரியுமா?
இன்னும் சில தினங்களில் 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 ஆம் ஆண்டில் கால்பதிக்க இருக்கின்றோம்.
புதிய ஆண்டு பிறக்கும் தருணத்தில் இந்த ஆண்டில் நடைபெற்ற நல்ல தருணங்கள் குறித்து மகிழ்ச்சிய வேண்டும்.
அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் திருமண உறவில் இணைந்த முக்கிய சினிமா பிரபலங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்லாம்.
நாகசைதன்யா- சோபிதா துலிபாலா
பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா அவரது விவாகரத்துக்குப் பின்னர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்தார் இது தொடர்பான செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ண ஸ்டூடியோவில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஐஸ்வர்யா-உமாபதி
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் கடந்த ஜூன் 10, 2024 அன்று சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனின் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர்.
வரலக்ஷ்மி சரத்குமார் -நிக்கோலாய் சச்தேவ்
பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து கடந்த ஜூலை 3, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள ஒரு கடற்கரை ரிசார்ட்டில் பாரம்பரிய இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
வரலக்ஷ்மிக்கு இது முதல் திருமணம் ஆனால் நிக்கோலாய்க்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.
காளிதாஸ் ஜெயராம்- தாரிணி காளிங்கராயர்
நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் அவரது நீண்ட நாள் காதலியும் ஊத்துக்குளி ஜமீன் வாரிசுமான தாரிணி காளிங்கராயருக்கும் கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி குருவாயூர் கோயிலில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
கீர்த்தி சுரேஷ்- ஆண்டனி தட்டில்
நடிகை கீர்த்தி சுரேஷ் திரமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.
இறுதியில் ஒருவழயாக தனது காதலர் ஆண்டனி தட்டிலை கோவாவில் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் திருமணம் வரையில் கீர்த்தி சுரேஷ் இது குறித்து வாய்திறக்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |