உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.. 4 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கும் நாடு! இந்தியாவுக்கு எத்தனாவது இடம்?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். 10 ஆண்டுகளாக வெளியிடப்படும் இந்த பட்டியலை, உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, சுகாதார வாழ்க்கை, உங்களுடைய சொந்த வாழ்வை முடிவு செய்யும் சுதந்திரம், மொத்த மக்கள் தொகை மற்றும் ஊழல் அளவு ஆகியவை அளவுகோல்களாக கொள்ளப்பட்டு சர்வே செய்யப்படுகிறது.
மேலும், மக்களை நேரடியாக சந்திப்பதால், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இதில், ஆச்சரியம் என்னவென்றால், 2021-ம் ஆண்டிற்கான உலகின் முதல் 7 மகிழ்ச்சியான நாடுகள் அனைத்தும் வட ஐரோப்பிய நாடுகளாகும்.
4 ஆண்டுகளாக முதலிடம்
தொடர்ந்து, முதலிடம் வகிக்கும் பின்லாந்தில் 55.5 லட்சம் மக்கள் தொகையும், 7.842 புள்ளிகளை கொண்டு 4 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. அடுத்து டென்மார்க் (7.620), சுவிட்சர்லாந்து (7.571), ஐஸ்லாந்து (7.554), நெதர்லாந்து (7.464), நார்வே (7.392), மற்றும் ஸ்வீடன் (7.363) ஆகியவை உள்ளன.
மேலும், அமெரிக்கா 16 வது இடத்திலும் ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் முறையே 15வது மற்றும் 20வது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின், இத்தாலி ஆகியவை 27, 28 ஆகிய இடங்களை பிடித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடான லெபனான், தென்அமெரிக்க நாடான வெனிசுலா, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் ஆகியவை பட்டியலில் கடைசி இடங்களை பிடித்துள்ளன.
பின்னுக்கு தள்ளிய இந்தியா
பாகிஸ்தான் (4.9 புள்ளிகளுடன்) 103 வது இடம் வகிக்கிறது. இதேபோன்று தொடர்ந்து பொருளாதார ரீதியில் தவித்து வரும் இலங்கை (4.3 புள்ளிகளுடன்) 126 வது இடத்தில் வகிக்கிறது. அதேப்போல் இந்தியாவுக்கு 136 வது இடம் கிடைத்து உள்ளது.
140. 66 கோடி மக்கள் தொகையை கொண்ட கணக்கின் படி, கடந்த 2021ம் ஆண்டில் 3.8 புள்ளிகளும், 2020ம் ஆண்டில் 3.5 புள்ளிகளும் நமது நாடு பெற்றிருந்தது.