Viral video: வாகனங்களை மறித்து நடுரோட்டில் ரொமான்ஸ்! சிங்கங்களின் குறும்பு
வேட்டை விலங்குகளான சிங்கம், புலி போன்ற விலங்குகளை கண்டாலே நம் அனைவரின் மனதிலும் ஒரு பயம் இருக்கும்.
சிங்கங்கள் பொதுவாக மிகவும் ஜாலியாக விளையாடக்கூடிய விலங்கு. கூட்டமாக இருக்கும்போது சிங்க கூட்டத்துக்குள்ளாகவே ஓடியாடி கடித்து உருண்டு விளையாடும்.
இதனை பார்க்கின்ற வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை.வாய்ப்பு கிடைப்பவர்கள் அந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து கொள்வது என்றென்றும் நினைவில் இருக்கும்.அப்படியான ஒரு வீடியோ தான் இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில்,வனப்பகுதிக்குள் சுற்றுலா சென்றவர்கள் காட்டு வழியில் சஃபாரி வாகனத்தில் சென்றிருக்கின்றனர்.அப்போது வழியிலேயே படுத்திருந்த சிங்கங்கள் இரண்டு ஒன்றுக்கு ஒன்று ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்திருக்கின்றன.
உடனே வாகனத்தை நிறுத்திய சுற்றுலாப் பயணிகள் சிங்கங்களுக்கு மிக அருகாமையில் இருந்து அவற்றின் ரொமான்ஸை பார்த்து ரசித்திருக்கின்றனர். அப்போது திடீரென இன்னொரு சிங்கம் ஓடிவந்து அந்த இரு சிங்கங்களுடன் இணைந்து விளையாடுகிறது.
Lions causing a traffic jam. pic.twitter.com/9Dg6BStPRC
— Fascinating (@fasc1nate) September 5, 2023
இந்த வீடியோ @fasc1nate என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. 2.8 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிகம் ரசிக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்றாகவும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |