காட்டு ராஜாவுக்கு என்ன அவசரமோ?கழிவறைக்குள் இருந்து யாரும் எதிர்பார்த்திடாத விருந்தாளியாக வந்த சிங்கம்!
காட்டிற்குள் சுற்றுலா பயணிகள் சஃபாரி ரைட் சென்ற போது இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டிற்குள் சஃபாரி ரைட் செய்ய வரும் சுற்றுலாப் பயணிகளை திடீர் என்று இயற்கை அழைத்தாள், அவர்கள் வசதிக்காகக் காட்டிற்குள் கட்டப்பட்ட ஒரு பொது கழிவறை தான் இந்த வீடியோ பதிவில் கட்டப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பொது கழிவறைக்கு யாரும் எதிர்பார்த்திடாத விருந்தாளியாகக் காட்டின் ராசாவே வந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பெண் அமர்ந்திருக்கும் கார், பொது கழிவறையை நெருங்கும்போது, சிங்கம் கம்பீரமாகக் கதவை விட்டு வெளியே வருவதை நீங்கள் வீடியோவில் காணலாம்.
Loo is not always safe & reliver for humans, sometime it can be used by others too...@susantananda3 @ParveenKaswan @PraveenIFShere @Saket_Badola pic.twitter.com/MNs9pwCycC
— WildLense® Eco Foundation ?? (@WildLense_India) October 2, 2021