தண்ணீர் அருந்த சென்ற சிங்கம்! முதலை கூட்டத்தில் மாட்டிக்கொண்ட காட்சி... நடந்தது என்ன?
காட்டின் ராஜாவான சிங்கத்துடன் முதலை ஒன்று சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது. தண்ணீர் குடிக்கச் சென்ற சிங்கம் ஒரு முதலைக் கூட்டத்தை எதிர்கொள்கிறது. அதனால் அங்கு ஒரு மோசமான சூழல் உருவாகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், சிங்கம் முதலில் ஆற்றில் தண்ணீர் குடிக்கச் செல்வதை காண முடிகின்றது. ஆனால் அங்குள்ள காட்சியை பார்த்து சற்று அரண்டுவிடுகிறது.
ஏனெனில் ஆற்றில் ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 10 முதலைகள் கொண்ட கூட்டமே தண்ணீரில் காணப்படுகின்றன. ஆனால், இதற்கெல்லாம் சிங்கம் அலட்டிக்கொள்ளவில்லை. அது பின்வாங்காமல் முதலையைத் தாக்க முயல்கிறது. அப்போது பல முதலைகள் சேர்ந்து சிங்கத்துக்கு பதிலடி கொடுக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிரடியாக எண்ட்ரியான சிஷ்யன்! தனது பாணியில் வரவேற்ற பிக்பாஸ்