அதிரடியாக எண்ட்ரியான சிஷ்யன்! தனது பாணியில் வரவேற்ற பிக்பாஸ்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டிற்குள் மிகவும் சர்ப்ரைஸாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர். பின்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக சதீஷ், ரம்யா இருவரும் உள்ளே சென்றுள்ளார்.
சுரேஷ் தாத்தா இரண்டாவதாக உள்ளே சென்றும் உடல்நிலை சரியில்லாததால் வெளியேறியுள்ளார். பின்பு நேற்றைய தினத்தில் கலக்கப் போவது யாரு தீனா வைல்டு கார்டு எண்ட்ரடியாக உள்ளே நுழைந்து தற்போது ஒன்பது போட்டியாளர்கள் உள்ளே விளையாடி வருகின்றனர்.
பிக்பாஸ் சாண்டி மாஸ்டர்
இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு ரன்னராக வந்த சாண்டி மாஸ்டர் இன்று உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே வந்த சாண்டியை சிஷ்யன் என்று பிக்பாஸ் வரவேற்றுள்ளார்.
மேலும் சாண்டி கலந்து கொண்ட பிக்பாஸ் சீசனில் பிக்பாஸை குருநாதா எனறு தான் அழைப்பார்கள். பிக்பாஸும் சிஷ்யா என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது. உள்ளே மாஸாக குருநாதா டீ சர்ட்டை அணிந்துகொண்டு உள்ளே வந்துள்ளார்.