சிங்கத்தையே எதிர்த்து நின்று அலறவிட்டு ஓட வைத்த நாய்.. பார்வையாளர்களை வியக்க வைத்த வைரல் வீடியோ!
சிங்கத்தையே எதிர்த்துநின்று சண்டையிடும் நாய் ஒன்றின் வீர சாகச வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பெரிய பெரிய காட்டு விலங்குகள் கூட சிங்கத்தை கண்டால் தலைதெறிக்க ஓடுவது வழக்கம்.
ஆனால் அப்பேற்பட்ட சிங்கம் ஒன்றை தெருநாய் ஒன்று எதிர்த்துநின்று சண்டையிட்டு சிங்கத்தை விரட்டியடிக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. குறிப்பிட்ட வீடியோ காட்சியை இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான பிரவீன் கஷ்வான் வெளியிட்டுள்ளார்.
மேலும், துணிச்சல் மிக்க அந்த நாயின் செயலை கண்ட அனைவரும் அந்த நாயின் வீரத்தையும், துணிச்சலையும் பாராட்டி வருகின்றனர்.
Need this much confidence in life. Dog vs Lion. It also highlights issue of stray dogs & wildlife interaction. @zubinashara pic.twitter.com/lNu7X4ALm5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2021