சாப்பிட்டவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுகின்றதா? இதையெல்லாம் செய்யாதீங்க
உணவு சாப்பிட்டதும் சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் மலம் கழிக்கும் உணர்வு என சில பிரச்சினை காணப்படும். இவை வருவதற்கு காரணம் மற்றும் தடுப்பு முறைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிட்ட உடன் ஏற்படும் பிரச்சினை
இந்த பிரச்சினைக்கு Irritable bowel syndrome என்று கூறப்படுகின்றது. இந்த பிரச்சினையினால் உலகம் முழுவதும் 10 சதவீதம் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இது மிதமான மற்றும் கடுமையான பிரச்சினையாகவும் மாறுகின்றது.
தனியாக மருந்து ஏதும் கிடையாத இந்த பிரச்சினைக்கு சில ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மேற்கொள்வதால் இதனை கட்டுப்படுத்த முடியுமாம்.
இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் ஃபைபர் சத்துள்ள காய்கறி, பழங்கள், கார உணவுகள், பால் தயிர், வெண்ணெய், தயிர் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆனால் தர்பூசணி, மாம்பழம், பேரிக்காய், ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை தவிர்த்து, ஆரஞ்சு, ப்ளூபெரி, திராட்சை, கேரட், பீன்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம்.
முட்டை, இறைச்சி போன்றவற்றையும், கீரை வகைகளையும் சாப்பிடலாம். உணவு டயட் வயிற்றுப்போக்கை குறைக்கும். இந்த பிரச்சினையின் அறிகுறி ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.