இர்பான் போல் நடிகர் அஜித் செய்த விடயம்: அனைத்திற்கும் ஒரு அளவு உண்டு... வைரலாகும் மருத்துவரின் காணொளி
குக் வித் கோமாளி பிரபலம் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது ஆபரேஷன் தியேட்டரில் எடுத்த காணொளியை அண்மையில் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
குறித்த காணொளியில் குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டி இருந்ததுமை பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.
மேலும் அந்த மருத்துவமனை செயல்பட 10 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இர்பானின் எல்லை மீறிய செயலுக்காக போலீசில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் அறிவுரை
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி என்பவர் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இவர் குறிப்பிடுகையில் இர்ஃபான் போல் நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினி பிரசவத்தின்போது படும் துயரத்தை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே இருந்து அவரிடம் இருந்த சின்ன ஹேன்டி கேமராவில் பதிவு செய்துள்ளார்.
பெண்கள் பிரசவத்தின் போது படும் கஷ்டத்தை நேரில் பார்த்தால், பெண்கள் மீதான ஆண்களின் பார்வையே முழுமையாக மாறிவிடும் என அஜித் இதனை செய்திருந்தார். அப்போது அஜித்தை எல்லோரும் பாராட்டினார்கள்.
ஆனால் இர்ஃபான் எல்லை மீறி சத்திரசிகிச்சை செய்யும் வேலையை பார்த்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தங்களின் வரையறை அறிந்து நடந்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |