கைகுழந்தையுடன் காரில் சென்ற குடும்பம்.. திடீரென்று எமனாக வந்த மின்னல்! நொடியில் நடந்த அதிசயம்
சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் Kansas மாகாணம் Waverly பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
வீதியில் பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதனால் காரின் இயக்கம் உடனே நின்றுபோயுள்ளது.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வேகமாக சென்று காரைப் பார்த்துள்ளனர். காருக்குள் கைக்குழந்தையின் 5 பேர் இருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக அதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இவை அனைத்தும் அந்த காரின் பின்னால் வந்த, மற்றொரு காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.