வாழைத்தண்டு நாரை கொண்டு தீபம் ஏற்றுங்க : இந்த பிரச்சினைகள் கிட்டவே நெருங்காது!
வீட்டில் தீபம் ஏற்றுவது தொன்று தொட்டு ஆன்மீக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கும் என்பது ஐதீகம்.
தீபத்தில் போடப்படும் திரியை பொறுத்து அதற்கான பலன்களும் மாறுபடுவதாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், வாழைத்தண்டு நாரை திரியாக கொண்டு தீபம் ஏற்றினால் கிடைக்கும் அற்புதமான ஆன்மீக பலன்கள் குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்மீக பலன்கள்
வீட்டில் தீபம் ஏற்றும் போது மற்ற திரிகளுக்கு பதிலாக வாழைத்தண்டு நாரில் தீபம் ஏற்றுவதால், குழந்தை அல்லாத தம்பதியர்களுக்க விரைவில் குழந்தை பாக்கியம் அமையும்.
சிவனுனிள் அருளை முழுமையாக பெற சிவ மந்திரத்தை உச்சரித்து இந்த தீபத்தை ஏற்றுவதால், வாழ்வில் இருக்கும் அனைத்து கஷ்டங்களும் நீங்கும்.
குறிப்பாக சாபத்திலேயே கொடிய சாபமான பித்ரு சாபம் என்பது ரொம்பவும் கடினமானதாக இருக்கும். முன்னோர்களை வாழும் போது சரியாக கவனிக்காமல் விட்டால் அந்த சந்ததியினருக்கே அந்த சாபத்தின் தாக்கம் இருக்கும். அப்படிப்பட்ட சாபத்தில் இருந்து விடுபடவும் இந்த வாழைத்தண்டு நாரில் தீபம் ஏற்றுவது பலனளிக்கும்.
நம்முடைய முன்னோர்கள் தான் பித்ருக்களாக இருக்கின்றனர். இவர்களுக்கு உரிய பூஜைகளையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாது செய்தல் வேண்டும் இல்லாவிடில் பித்ரு சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
முன்னோர்கள் இருந்த போது, பாதுகாக்க முடியாதவர்கள், இறந்த போது கடமைகளை ஆற்ற தவறியவர்கள் பெரிய பாவங்களை செய்தவர்களாக ஆகி விடுவார்கள். பித்துரு சாபம் இருப்பவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு போராடினாலும் முன்னேற்றமே இருக்காது.
சாபத்திற்கு ஆளாகியவர்கள் தொடர்ந்து வாழ்க்கையில் தோல்விகளையும், சறுக்கல்கள் காணுவார்கள். இந்த பித்ரு சாபம், குலதெய்வ சாபம், தெய்வ குற்றம் போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்றால் தொடர்ந்து வீட்டில் வாழைத்தண்டு நாரின் திரியினால் விளக்கேற்ற வேண்டும்.
இந்த திரியை இது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும், நாட்டு மருந்து கடைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
இல்லாவிட்டால், வாழைத்தண்டை பிரித்து எடுத்து அதிலிருந்து கிடைக்கக் கூடிய நாரை நன்கு வெயிலில் உலர்த்தி காய வைத்து எடுத்து, இந்த நாரை கொண்டு அகல் தீபத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். இவ்வாறு தீபம் ஏற்றுவதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் மற்றும் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |