Lifebuoy விளம்பரத்தில் வரும் குழந்தை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
லைஃப் பாய் சோப் விளம்பரத்தில் நடித்த குழந்தை தற்போது எப்படி இருக்கிறார் என்ற விவரங்கள் புகைப்படங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குழந்தை நட்சத்திரமாக தங்களது சினிமா பயணத்தை தொடங்கியவர்கள் தற்போது சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கிறார்கள்.
குழந்தையாக இருக்கும் பொழுது பார்த்த பிரபலங்கள் இளம் வயதிற்கு வந்தவுடன் அவர்கள் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருப்பார்கள்.
அந்த வகையில், லைஃப் பாய் சோப் விளம்பரத்தில் “ஏ பன்டி உன் சோப்பு என்ன ஸ்லோவா” என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்த விளம்பரம் பலருக்கும் நினைவிருக்கலாம். அவர் பேசும் வசனமும், அந்த விளம்பரமும் பார்ப்பவர்களை ஈர்க்கும் வகையில இருக்கும்.
விளம்பரத்தில் வரும் சிறுமியா இது?
அந்த சிறுமி தான் தற்போது பிரபல நடிகையாக மாறியுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை பாலிவுட் நடிகை அவ்னீத் கவுர் தான்.
குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவ்னீத், முதலில் லைஃப்பாய் விளம்பரம் மூலம் அங்கீகாரம் பெற்றார்.
இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்திருக்கிறார். விளம்பரங்களில் மட்டுமல்ல, தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் தன்னுடைய திறமையை வெளிகாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அவ்னீத் கவுரின் தற்போதைய புகைப்படங்கள் “அவரா இவர்?” என வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |