கல்யாண வீட்டை கலங்கடித்த பேனர்! மாப்பிள்ளைக்கு ஆயுள் தண்டனை...
திருமணம் ஒன்றிற்கு மணமகன் வைத்துள்ள திருமண நாளிதழ் பேனர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வித்தியாசமான திருமண நாளிதழ்
சமீப காலத்தில் திருமணம் என்பது ஒரு வித்தியாசமான நிகழ்வாக மட்டுமின்றி, பல மாற்றங்களுடன் நடைபெற்று வருகின்றது.
மணமகள் நடனமாடியவாறு வருதல், பரிசுப்பொருட்கள் கொடுப்பதில் கொமடி, திருமண அழைப்பிதழில் நகைச்சுவை என அதிகரித்து வருகின்றது.
அதே போன்று இங்கு திருமண பத்திரிக்கை ஒன்று திருமண நாளிதழாக வெளியாகியுள்ளது. அதாவது தினமும் செய்தித்தாள்களாக வெளிவரும் நாளிதழ்கள் போன்று பேனர் வைத்து மணமகன் ஒருவர் வாயடைக்க வைத்துள்ளார்.
பெண்ணின் மனதை திருடிய மாப்பிள்ளைக்கு ஆயுள் தண்டனை என்று கூறப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு செய்திகள் என்ற பக்கத்தில் கல்யாண பந்தியில் கலவரம் என்றும் அதன் பக்கத்தில் கல்யாண மாலை என்று இளைஞர்களுக்கு பெண் தேடுவது போன்று பேனர் அடிக்கப்பட்டுள்ளது.
