அனைவரையும் எளிதில் ஈர்த்துவிடும் சாய் பல்லவி! இது எல்லாம் தான் காரணம்
நடிகை சாய் பல்லவியின் வாழ்க்கையில் இருந்து பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
மலையாள சினிமாவில் “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் சாய்பல்லவி.
இதனை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, தற்போது பான் இந்தியா படங்களில் நடித்து வருகிறார்.
இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சாய்பல்லவியின் எளிமையான தோற்றம் மற்றும் இயற்கையான அழகு ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறது.
அந்த வகையில், பெண்களாக இருப்பவர்கள் சாய்பல்லவியின் வாழ்க்கையில் இருந்து கற்க வேண்டிய படிப்பினைகள் என்னென்ன என்பதனை எமது பதிவில் பார்க்கலாம்.
படிப்பினைகள்
1. சாய் பல்லவி தன்னுடைய இயற்கையான அழகு மற்றும் அவருடைய நடிப்பால் பிரபலமாக இருக்கிறார். அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறாரோ அதே போன்று தான் சினிமாவிலும் நடிப்பிறார். தொழில்துறைக்கு பொருந்துவதை விட தனது மதிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார்.
2. நட்சத்திரமாக இருந்தாலும் சாய் பல்லவி, கல்வியை பாதியில் நிறுத்தாமல் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்கிறார். நடிகையாக பயணம் ஆரம்பமானாலும் அதற்கு பிரேக் கொடுத்து விட்டு தன்னுடைய இலட்சியத்தை அடைந்திருக்கிறார். வாழ்க்கையில் பெண்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களின் இலட்சியத்தை கைவிடக்கூடாது.
3. சாய் பல்லவி பெரிய நட்சத்திரமாக மாறினாலும், தன்னுடைய பணி நெறிமுறைகள் மற்றும் வளர்ச்சிக்காக ஏதாவது ஒரு விடயத்தை செய்து கொண்டிருக்கிறார். சம்பிரதாயங்களிலும் அதிகமான நாட்டம் கொண்டவராக இருக்கிறார்.
4. நடிப்பிலும், நடனத்திலும், பாவனைகளிலும் சாய் பல்லவி காட்டும் ஆர்வம் மற்ற நடிகர்களை வியக்க வைக்கிறது. ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் அறிமுகமான சாய் பல்லவி அடிக்கடி அது குறித்து பேசிக் கொண்டே இருப்பார். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதில் சாய்பல்லவியை அடித்துக் கொள்ள ஆளே இல்லை.
5. தன்னம்பிக்கை என்பதை சாய் பல்லவி ஒரேயடியாகப் பெற்றவர் அல்ல, ஆரம்பத்தில் மேடை பயத்தால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இன்று என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை உள்ளது. அதே போன்று பண்பு கொண்ட பெண்ணாகவும் பார்க்கப்படுகிறார்.
6. சாய் பல்லவி தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவையாகும். உதாரணமாக, அது பிரேமம் மலர், கார்கி, ராமாயணத்தின் சீதை உள்ளிட்டவைகளை கூறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |