73 வயதில் கணவரை விவாகரத்து செய்து காதலனை மணந்த பலே பாட்டி - சுவாரசிய தகவல்
73 வயது பாட்டி ஒருவர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு காதலனை கரம்பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த கரோல் எச். மேக் என்ற 73 வயது பாட்டி 40 ஆண்டுகாலம் கணவனுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
அதன்பின்னர் தற்போது, கணவரை விவாகரத்து செய்துவிட்டு காதலனை மணந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதுபற்றி பேசிய அந்த பாட்டி, வாழ்க்கை ரொம்ப விசித்திரமானது, 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின், 70 வயதில் தனியாக இருந்தேன். 73 வயதிலும், கொரோனா தொற்று தனிமைக்கு நடுவே இந்த நிலைக்கு வந்துள்ளேன்.
இதனைத்தொடர்ந்து, இவரது கணவர் 40 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பிறகு, தன்னை ஏமாற்றிவிட்டார் என்பதால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துவாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை விவாகரத்தும் செய்துவிட்டார்.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு பிறகு வேறு ஒருவரை சந்தித்து அவருடன் காதலில் விழுந்து அவரையே தற்போது மோதிரம் மாற்றி திருமணமும் செய்துள்ளார். இந்த தகவலானது தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
This wedding should be televised. https://t.co/PEW0mCThzJ
— Joe Lamour ???️? (@lamour) February 15, 2022