ஒரு பேன் விடாமல் அலசி எடுக்கும் கை மருந்து- யாரெல்லாம் போடலாம் தெரியுமா?
பெண்களுக்காக இருக்கும் தலைமுடி பிரச்சினைகளில் பேன் தொல்லையும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இந்த பிரச்சினை அதிக வியர்வை பிரச்சினையுள்ளவர்களுக்கு இருக்கும். இப்படி வரும் பேன்கள் ஒருத்தருக்கு இருந்தால் கண்டிப்பாக இன்னொருவருக்கு பரவக் கூடியது.
கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பேன் தொல்லை இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுக வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை முறையில் வீட்டில் மருத்துவம் செய்து பார்க்கலாம்.
அந்த வகையில் பேனை தடம் தெரியாமல் அழிப்பதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
1. வேப்பிலை மற்றும் துளசி
வேப்பிலை மற்றும் துளசி ஆகியவற்றை எடுத்து நன்றாக சுத்தம் செய்து விட்டு, அதனை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
நைசாக அரைத்து எடுத்தவுடன் தலையை சுத்தமாக கழுவி விட்டு பின்னர் இந்த வேப்பிலை கலவையை தடவிக் கொள்ள வேண்டும்.
தலையில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து விட்டு சுத்தமான நீரினால் கழுவ வேண்டும்.
இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
2. பூண்டு
5 பூண்டுகளை எடுத்து அதில் தோல் நீக்கி விட்டு அரைத்து கொஞ்சமாக எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு பூசுங்கள்.
இவ்வாறு பூசி மசாஜ் செய்து விட்டு 10 - 15 நிமிடங்கள் தலையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த மருந்தை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். பேன் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |