ஈழத்து பெண் லொஸ்லியா போல எடையை குறைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு பானம் போதும்
இலங்கை செய்திவாசிப்பாளரான லொஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தமிழகம் முழுவதும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
தற்போது எடையை நன்றாக குறைத்து புதிய படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகின்றார்.
அவரை போல எடையை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்தாலே போதும். மிக விரைவாக எடையில் மாற்றம் காண உடற்பயிற்சியுடன் இந்த பானத்தை தினமும் காலை பருகுங்கள்.
இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்....
தேவையான பொருட்கள்
- இஞ்சி - 1 சிறிய துண்டு
- எலுமிச்சை - 1
- பட்டை - 2 துண்டுகள்
- புதினா இலைகள் - சிறிது
- தண்ணீர் - தேவையான அளவு
- சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் நசுக்கிய இஞ்சி, பட்டை, புதினா போன்றவற்றை போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு, நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.