மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்ட பெண்கள்: உருக வைக்கும் லெஸ்பியன் காதல்
நாக்பூரை சேர்ந்த இரு பெண் மருத்துவர்கள் பெற்றோர் துணையுடன் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பரோமிதா முகர்ஜி மற்றும் தோழி சுரபிமித்ரா. மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இருவருமே சிறுவயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள்.
ஒருவரை ஒருவர் அதிகளவில் புரிந்து கொண்ட பிறகே இருவரும் லெஸ்பியன் உணர்வு இருப்பதை புரிந்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாகவே வாழ்ந்து வந்தவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு ஒருவர் மீது ஒருவர் அதிக ஈர்ப்பு ஏற்பட்டதுடன் அது காதலாகவும் மாறியுள்ளது.
மருத்துவராக பணிபுரிந்து வரும் இருவரும் சில வருடங்கள் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். பின்பு வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருப்பதற்கு திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளனர்.
இந்த தம்பதியினரின் உயிருக்கு உயிரான காதலை அடுத்து, கடந்த 29-ந்தேதி நாக்பூரில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் முடிந்தபோது ஒருவருக்கு ஒருவர் மோதிரம் அணிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையொட்டி நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதில் இருவரது வீட்டு உறவினர்கள் கூட்டம் கூட்டமாக கலந்துக் கொண்டு லெஸ்பியன் தம்பதிகளை மனமார வாழ்த்தி சென்றுள்ளனர்.
