முதலையில் கழுத்தை ஒற்றை பிடியில் கௌவிய சிறுத்தை... பதறவைக்கும் காட்சி
சிறுத்தையொன்று முதலையின் கழுத்தை கௌவியபடி நகரவிடாமல் வைத்திருக்கும் பகீர் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுத்தை, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் அமைப்பு இயற்கையானவே வேட்டைக்கு இலகுவாக உருவாகியிருக்கின்றது.
இவற்றின் வேகம் மற்றும் வேட்டை திறன் ஆகியவற்றில் சிறுத்தைகள் பெயர்பெற்றவை. இவை வேட்டையாடிய விலங்கை பெரும்பாலும் மரங்களுக்கு மேலே கொண்டுசென்று உண்ணுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
பொதுவாக தனித்து வாழ விரும்பும் சிறுத்தைகள், இனச்சேர்க்கையின் போது மட்டுமே தனது இணையுடன் சேர்ந்து வாழ்கின்றன. தான் பிரசவிக்கும் குட்டியை, ஒரு சிறுத்தை கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேல் பராமரிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
அவை ஒரு மணி நேரத்துக்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். சிறுத்தையிடம் ஒரு விலங்கு சிக்கிவிட்டால் ஓடி தப்புவது நடக்காத காரியம்.
சிறுத்தைகள் பொதுவாக இரையின் கழுத்து பகுதியை குறிவைத்து பாய்ந்து தாக்கும் தன்மை கொண்டவை.
அப்படி முதலையின் கழுத்தை ஒரே பிடியில் கௌவிய சிறுத்தையின் பகீர் கிளப்பும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |