சிறுத்தைக்கு ஆட்டம் காட்டிய கேப்பிபாரா... வியக்க வைக்கும் வைரல் காட்சி
இரைக்காக துரத்திய சிறுத்தைக்கு ஆட்டம் காட்டிய கேப்பிபாராவின் வியக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நீர் நிலைகளுக்கு அருகில் வாழும் உலகின் மிகப்பெரிதளவான கொறிக்கும் உயிரின வகையாக கேப்பிபாரா பார்க்கப்படுகின்றது.
கினி பன்றிகளும் (Guinea pigs) வளை எலிகளும் (Rock cavies) இதன் நெருங்கிய உறவினர்கள். கேப்பிபாராக்கள்“சிறுத்தைப்புலியின் அன்றாடக ஆகாரம்” என்று வர்ணிக்கப்படுகின்றது.
அந்தளவுக்கு இவற்றை சிறுத்தைகள் விரும்பி சாப்பிடுகின்றது. ஒரு பெண் கேப்பிபரா 15 மாதங்கள் வயதாகும்போதே இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கின்றது.
அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் விலங்கினங்களில் கேப்பிபாராக்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
அந்த வகையில் தன்னை வேட்டையாட துரத்தும் ஒரு சிறுத்தையிடமிருந்து கண்ணிமைக்கும் நொடியில் தப்பித்த கேப்பிபாராவின் அசாத்திய திறமையை காட்டும் காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |