ஒரே பாய்ச்சலில் பறவையை வேட்டையாடிய சிறுத்தை... பதறவைக்கும் வைரல் காணொளி!
ஒரே பாய்ச்சலில் பறவையொன்றை கொடூரமாக வேட்டையாடிய சிறுத்தையின் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால் மனிதர்கள் உட்பட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இனம் புரியாத பயம் இருக்கும்.
காரணம் இவற்றின் அசுர பிடியில் சிக்கினால் உயிர் பிழைப்பது அரிது. காட்டில் வாழும் மிருகங்களின் வேட்டை திறன் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கு பீதியை கிளப்புவதாக இருக்கும்.
குறிப்பாக சிறுத்தை மிகவும் தந்திரமான முறையில் வேட்டையாடக்கூடியது. சிறுத்தை, தானாகவே வேட்டையாடி உண்பதும் உண்டு.
பிற விலங்குகள் உண்டதுபோக, மீதமுள்ள கழிவு மாமிசங்களை உண்பதும் உண்டு. எனவே, சிறுத்தைகளுக்கு, எப்போதும் உணவுப்பிரச்சினை ஏற்படுவதே கிடையாது.
சிறுத்தை மணிக்கு 112 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது, இது நிலத்தில் உள்ள விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்காக கருதப்படுகிறது. இப்படியிருக்கும் போது இதன் பிடியில் சிக்கிய பறவையின் நிலை பரிதாபம் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
