70,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நோக்கி வரும் வாழ் நட்சத்திரத்தால் ஆபத்தா?
பூமியின் வழியில் சுமார் 70,000 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ் நட்சத்திரம் ஒன்று கடக்க உள்ளது.
இது மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிகோரி ஜே. லியோனார்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வால் நட்சத்திரத்திற்கு சி/2021 ஏ1 லியோனார்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வால் நட்சத்திரம் டிசம்பர் மாதத்தில் பூமியைக் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் உள்ள பல இடங்களில் இந்த வால் நட்சத்திரத்தை மக்கள் வெறும் கண்களில் காணலாம்.
ஆனால், டெல்லி வாசிகளுக்கு இந்த வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கிறது. டெல்லியில் உள்ள மாசுபாடு காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் ஒரு நட்சத்திரத்தைக் கூட பார்க்க இயலாது.
அநேகமாக இந்த வால் நட்சத்திரம் வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் மக்களின் கண்ணுக்கும் நன்றாகத் தெரியும்.
உச்சக்கட்டத் தெரிவு வரும் டிசம்பர் 13 ஆம் திகதி அன்று நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, வால்மீன் நமது கிரகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லாமல் பூமியைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.