லியோ டிரைலரில் விஜய் பேசிய ஆபாச வார்த்தை! திடீரென எழுந்த சர்ச்சை
விஜய் நடிப்பில் தயாரான லியோ படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
நடிகர் விஜய்யின் லியோ
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது லியோ படத்தில் படத்தில் நடித்து வருகின்றார்.
சமீபத்தில் இவர் நடித்த படங்கள் சற்று பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், இப்படத்தினை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய்யின் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இதுவாகும். ஜெயிலர் படத்தின் வெற்றியை அடுத்து, லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியுள்ள நிலையில் இப்படம், அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளது.
அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
டிரைலர் வெளியீடு
இந்நிலையில் இன்று டிரைலர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. மனைவி த்ரிஷா, மகளுடன் அழகான குடும்பாக வாழ்ந்து வரும் விஜய், இன்னொரு விஜய் என சஸ்பென்ஸ் வைத்து அதிரடியில் மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளை கொண்டு படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
லியோ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் வில்லனாக நடித்துள்ள நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன் பொலிசாகவும், மன்சூர் அலிகான், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்பட பலரும் நடித்து அசத்தியுள்ளனர்.
தற்போது விஜய் குறித்த டிரைலரில் அழகாக குடும்பம் என்ற வசனத்திற்கு பின்பு கெட்ட வார்த்தை பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |