வெற்றி விழா முடிஞ்சிடுச்சு.. அடுத்து பார்ட்டி ரெடியான விஜய் - த்ரிஷா! எங்கு தெரியுமா?
லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழா நடந்து முடிந்த கையுடன் அடுத்த பார்ட்டி நடைப்பெற இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
லியோ திரைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் இருந்து வருகிறார்.
இவர் பீஸ்ட், வாரிசு படங்களை தொடர்ந்து லோகேஷ் உடன் கூட்டணியில் லியோ படம் நடித்தார். பல தடைகளை தாண்டி கடந்த மாதம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிக்பாஸ் செண்டி, பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடித்திருந்தார்கள்.
நினைத்த அளவு வெற்றியை தரவிட்டாலும் ஏதோ மக்களால் ஓரளவு கொண்டாடப்பட்டது.
அடுத்த பார்ட்டி
இந்த நிலையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ வெற்றி விழாவை நடத்தினார்கள். இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து அவர் வெற்றி விழாவில் பேசிய விடயங்கள் சமூக வலைத்தளங்களில் காகம், பருந்தாக வலம் வருகின்றது.
இது ஒரு புறம் இருக்கையில் விஜயின் அரசியல் வாழ்க்கைக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும என்ற எண்ணத்தில் ஒரு குழு வேலை பார்த்து வருகின்றது.
வெற்றி விழாவை தொடர்ந்து லியோ சக்சஸ் பார்ட்டி நடக்க இருக்கிறதாம். தற்போது விஜய் தளபதி 68 ஷீட்டிங் இருப்பதால் வெகுவிரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ ஓடாத படத்திற்கு எத்தனை விழா தான் கொண்டாடுவீர்கள்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |