லியோ படத்தில் விஜயிற்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கியது இவரா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிநடை போட்டுவருகின்றது.
இத்திரைப்படத்தில் தளபதி விஜய்யிற்கு அடுத்தபடியாக அதிக சம்பளம் வாங்கியவர் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
தென்னிந்திய திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழ் திரையுலகின் செல்வந்த நடிகர்களுள் ஒருவராக இருக்கின்றார்.
கிட்டத்தட்ட 38 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் இருக்கும் இவர், வாங்கிய முதல் சம்பளம் 500 ரூபாய் தானாம், ஒரு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததற்காக இவருக்கு இந்த தொகை சம்பளமாக கிடைத்துள்ளது.
இதன் பின்னர் அசுர வளர்ச்சியடைந்த நடிகர் விஜய் தற்போது அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். லியோ படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ.120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இவர் நடிக்கும் ‘தளபது 68’ திரைப்படத்தில் விஜய் 150 கோடி சம்பளமாக வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிக சம்பளம்
லியோ படத்தில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கியுள்ளவர், சஞ்சய் தத் தான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பான் இந்திய நடிகரான இவர் பாலிவுட்டில் பல படங்களில் ஹீரோ மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரும் விஜய் போலவே திரையுலகில் மிகவும் அனுபவசாலி.
கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த பிறகு, தற்போது இவர் பான் இந்திய அளவில் பெரிய நடிகராக தோற்றம் பெற்றுள்ளார். இவர், லியோ படத்திலும் ஆண்டனி தாஸ் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக இவர் 8 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே லியோ திரைப்படத்தில் விஜய்க்கு அடுத்து அதிக சம்பளம் பெற்றவர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |