கோடை காலத்தில் ஏறிப்போன எலுமிச்சை விலை - கிலோ எவ்வளவு தெரியுமா?
கோடை காலத்தில் மக்கள் அதிகமாக நுகரும் ஒரு பழம் எலுமிச்சை தான். தற்போது அதன் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

எலுமிச்சை
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடை காலமாக கருதப்படுகிறது.
கொழுத்தும் இந்த கோடை காலத்தில் மக்கயள் எல்லோரும் அதிகமான பழங்களை கொள்வனவு செய்து சாறாக்கி குடிப்பார்கள். கோடை ாகலத்தில் உடலை நேரேற்றமாக வைத்திருப்பது முக்கியம்.
ஒவ்வொருவருக்கும் இந்த வெயிலால் உடலில் நெருப்பை அள்ளி போட்டது போல இருக்கும்.

மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே பகல் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
மக்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதால் எலுமிச்சை, தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், மாம்பழம் போன்ற பழங்கள் இந்த கோடை கால பழங்கள் என்பதால் அதிகமாக வாங்குவார்கள்.

பொதுவாக உலுமிச்சை ஏழைகளின் பழம் எனப்படுகின்றது. எனென்றால் இது குறைந்த விலையில் கிடைக்கும் ஆனால் தற்போது எலுமிச்சையின் விலை வாயை பிளக்க வைத்துள்ளது.
சில்லறை விற்பனை கடைகளில் ஒரு எலுமிச்சை ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மேலும் சந்தையில் 80 கிலோ பை ஒன்றி ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் வரை ஒரு எலுமிச்சை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |