வீட்டில் ஓட்ஸ் மற்றும் லெமன் இருக்கா ? அப்போ இந்த ரெசிபியை செய்து பாருங்க
வீட்டில் செய்வதற்கு எதுவும் இல்லை எனும் சந்தர்பத்தில் ஓட்ஸ் எல்லோரது வீட்டிலும் கண்டிப்பாக இருக்கும்.
அதை வைத்து எதுவும் செய்ய தெரியாது எனும் பட்ஜத்தில் இந்த ரெசிபியை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இந்த ரெசிபி செய்ய வெறும் 10 நிமிடங்கள் போதும்.
மொத்ததில் சொல்லப்போனால் இது சோம்பேறி ரெசிபி என்று தான் சொல்ல வேண்டும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 கப் விரைவாக சமைக்கக்கூடிய ஓட்ஸ்
- 1 எலுமிச்சை
- ⅛ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1.25 கப் தண்ணீர்
- உப்பு
- மேல் பூசுவதற்கு 1 தேக்கரண்டி எள் எண்ணெய்
தாளிக்க
- 1 தேக்கரண்டி எள் எண்ணெய்
- ½ தேக்கரண்டி கடுகு
- 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 தேக்கரண்டி சன்னா பருப்பு
- 1 தேக்கரண்டி வேர்க்கடலை
- 1 துளிர் கறிவேப்பிலை
- 2 சிவப்பு மிளகாய் அல்லது பச்சை மிளகாய்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, தாளிக்க வைதம்திருக்கும் பொருட்களை வரிசைப்படி போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்து வரும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
இரண்டாவதாக, தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எலுமிச்சை பிழிந்து கொதிக்க விடவும். சிலர் ஊட்டச்சத்து அப்படியே இருக்க வெண்டும் என நினைப்பார்கள் அவர்கள் எலுமிச்சையை இறக்கிய பின்னர் போடலாம்.
ஆனால் அடுப்பில் வைத்திருக்கும் போது சேர்த்தால் சுவையாக இருக்கும். எலுமிச்சையின் மணம் அப்படியே மாறாமல் இருப்பது அவசியம். அப்போது தான் சுவையாக இருக்கும்.
ஓட்ஸைச் சேர்த்து நன்கு கலக்கவும். மூடி வைத்து 3 நிமிடங்கள் மிதமான தீயில் சமைக்கவும். இதை அப்படியே சூடாக பரிமாறினால் நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
