சூடான உணவில் எலுமிச்சை சாறை சேர்ப்பவரா நீங்கள்? ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள்
பொதுவாக இன்றைய காலத்தில் பலரும் தங்களது உணவில் எலுமிச்சையை சேர்த்துக் கொள்கின்றனர். வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட எலுமிச்சை பல நன்மைகளை நமக்கு அளிக்கின்றது.
எலுமிச்சையின் சத்துக்கள்
இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கால்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் வைட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது.
மேலும் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரும்புச்சத்து உடலில் சேர்வதை ஊக்குவிக்கவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், சருமம் மற்றும் முடியை மிருதுவாக்கவும், உடலிலிருந்து இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
ஆனால் இவ்வளவு சத்துக்கள் கொண்ட எலுமிச்சையை சூடான சாதத்தில் சாறு பிழிந்து உணவு தயாரிக்கக்கூடாதாம். அதற்கான காரணத்தை காணலாம்.

சூடான உணவில் ஏன் சேர்க்ககூடாது?
சூடான உணவின்மீது எலுமிச்சை சாறு பிழியக்கூடாது. ஏனெனில் சூட்டின்மீது எலுமிச்சை சாறின் உணர்திறன் அதிகமாக இருப்பதால் அதிலுள்ள ஊட்டச்சத்துகள் அனைத்தும் சூட்டில் அழிந்துவிடும் .
அதுமட்டுமின்றி வைட்டமின் சி அல்லது அஸ்கார்பிக் அமிலமானது வெப்பம் மற்றும் வெளிச்சம் ஆகிய இரண்டாலும் பாதிக்கப்படக்கூடியது.
இது 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே மிக வேகமாக சிதையும் தன்மையுடையது. எனவே சூடான உணவு அல்லது சூடான தண்ணீரில் எலுமிச்சையை சேர்க்கும் போது அது வைட்டமின் மற்றும் நொதிகளை அழித்துவிடும்.
மேலும் சிறந்த ஆண்டி ஆக்சிண்டான ஃப்ளவனாய்டுகள் போன்றவையும் எலுமிச்சையிலுள்ள சிட்ரிக் அமிலத்தில் உள்ளன. இதை சூடான தண்ணீரில் சேர்க்கும்போது எந்த நன்மையும் உடலுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.
