ராகு தோஷம் பில்லி சூனியம் நீக்கி வேண்டுதலை நிறைவேற்றும் எலுமிச்சை மாலை
அம்மன் வழிபாடு என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும். அதாவது, நீங்கள் தீய சக்திகளால் சூழ்ந்திருக்கிறீர்கள் எதிர்மறை ஆற்றலால் சூழ்ந்து இருக்கிறீர்கள் என்ற பொழுது நிச்சயம் அம்மன் வழிபாடு உங்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுக்கும்.
மேலும், அம்மன் வழிபாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடாக எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்யக்கூடிய ஒன்று உள்ளது. இந்த எலுமிச்சை மாலை அம்மனுடைய வெப்பமான திருமேனியை குளிர்விப்பதற்காக சாற்றக்கூடிய ஒன்றாக கருதப்படுகிறது.
மேலும், அம்மனுக்கு எலுமிச்சை மாலை மிகவும் உகந்ததாகவும் கருதப்படுகிறது. இவ்வாறு அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்வதனால் நமக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் துன்பங்கள் விலகி தீய சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றியும் அம்மன் அருள் புரிவாள் என்பது ஐதீகம்.

ராகு தோஷம்:
அதைப்போல், நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய ராகு, கேது, தோஷம் ஒருவருக்கு செய்யக்கூடிய பில்லி, சூனியம், பாதிப்புகளில் இருந்து காப்பாற்றவும் இந்த எலுமிச்சை மாலை மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி எலுமிச்சை மாலை சாற்றி வழிபாடு செய்வதால் நாம் முற்றிலும் ராகு தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
விரதம்:
அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றும் பொழுது நாம் விரதம் மேற்கொள்ள வேண்டும். இதன் வழியாக அம்மனுடைய முழு ஆசீர்வாதத்தையும் நாம் பெறலாம். பொதுவாக, எலுமிச்சம் பழம் தீய சக்திகளை விரட்டக்கூடிய சக்தி வாய்ந்தது.
பன்னீர்:
எலுமிச்சை மாலை சாற்றும் முன்பு நாம் பழங்களை வாங்கி சுத்தமான தண்ணீரில் சிறிது பன்னீர் ஊற்றி பழங்களை போட்டு நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.

எலுமிச்சை மாலை:
மஞ்சள் தேய்த்த நூலை நாம் இந்த எலுமிச்சை மாலை கோர்ப்பதற்கு பயன்படுத்தலாம். மேலும், ஒற்றைப்படை எண்ணிக்கையில் எலுமிச்சை பழங்களை கோர்த்து மாலையாக கட்டி அம்மனிடம் வேண்டிக்கொண்டு சாற்றுவது நம்மளுடைய வேண்டுதலை நிறைவேற்றும்.
இவ்வாறு அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செய்வதினால் நமக்கு அம்மனுடைய பரிபூரண அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும். அதோடு, நம்முடைய குடும்பத்தில் மகிழ்ச்சியும் தீய சக்திகளின் தாக்கங்களும் விலகும்.