Onam Special: ஓணம் சத்யா கேரளாவின் பாரம்பரிய விருந்தில் உணவுகள்
கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஓணம் ஒன்று. அந்த ஓணம் பண்டிகை நாளில் இடம் பெறக்கூடிய ஓணம் சத்யா என்பது கேரளாவில் பாரம்பரிய உணவு விருந்தாகும். மேலும், "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழிக்கு ஏற்ப ஓணம் பண்டிகையில் உணவுக்கும் விருந்தோம்பலுக்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மேலும், ஓணம் பண்டிகை சுமார் பத்து நாட்கள் கொண்டாட கூடிய ஒரு முக்கியமான பண்டிகையாகும். அதில் திருவோணம் நாளில் சத்யா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஒன்றாக அமர்ந்து இந்த பாரம்பரிய விருந்தை மகிழ்ந்து உண்பார்கள்.

இந்த உணவு ஓணம் சத்யாவில் பலவிதமான சைவ உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. சாதம், பருப்பு, நெய், சாம்பார், ரசம், மோர் அவியல், தோரன், காலன், ஓலன், எரிசேரி, கூட்டு, பச்சடிக்கு செடி உள்ளிட்ட பல உணவு வகைகள் இதில் இடம் பெறுகிறது.
அதேபோல், இனிப்பு வகைகளில் அடை பிரதமன், பால், பாயாசம் உள்ளிட்ட பாயாசங்கள் முக்கிய இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சர்க்கரை புரட்டி, பப்படம், ஊறுகாய் உள்ளிட்டவையும் சத்யா விருந்து சுவையை இன்னும் அதிகரிக்கிறது. மற்றொரு சிறப்பு உணவு வாழை இலையில் தான் பரிமாறப்படுகிறது.
வாழை இலை உணவு பரிமாறும் பாரம்பரியம் கேரளாவின் கலாச்சாரத்துடன் நீண்ட காலமாக ஒன்றிணைந்தது. சத்யாவில் இடம்பெறும் உணவுகளில் தேங்காய் பால், தேங்காய், தயிர் மோர் போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் ஓணம் சத்யா உணவுகளுக்கு தனித்துவமான கேரள சுவையும் மனமும் கிடைக்கிறது. அதை போல், பலவிதமான உணவுகள் இடம் பெறும் என்று ஓணம் சத்யாவில் செரிமானத்திற்கு உதவக்கூடிய வகைகள் இஞ்சி கறி, இஞ்சி புளி போன்ற உணவுகளும் சேர்க்கப்படுகிறது.
இவற்றில் உள்ள புளிப்பு காரம் மற்றும் நறுமணம் சத்யா விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கிறது. முக்கியமாக ஓணம் சத்யா என்பது வெறும் உணவு விருந்து மட்டுமல்ல குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் என எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவை பகிர்ந்து கொள்வதின் வழியாக குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி அதோடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் கேரளாவின் முக்கியமான பாரம்பரிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது.