காலையில் இந்த பானத்தை குடிங்க... குளிர்கால சளி, இருமலை ஓட ஓட விரட்டிடலாம்
இருமல், சளி, தொண்டை பிரச்சனையை சரி செய்வதற்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலை வேளையில் காபிக்கு பதிலாக சூடான நீரில் எலுமிச்சை மற்றும் கிராம்பு கலந்து குடித்தால், நாள் முழுவதும் சுறுப்பாகவும், எடையைக் குறைக்கவும், சளி, இருமல், தொண்டை பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.
நாம் காலையில் எடுத்தக் கொள்ளும் காபியில் 100-120 கலோரிகள் உள்ளன. அதேசமயம் எலுமிச்சை மற்றும் கிராம்பு நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகினால் 20 கலோரிகள் மட்டுமே உள்ளன.
எலுமிச்சை மற்றும் கிராம்பு ஏன்?
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்தானது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதுடன், சளியை எளிதாக வெளியேற்றவும் உதவுகின்றது.
கிராம்பு அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் யூஜெனால் மற்றும் கேலிக் அமிலத்தின் கலவைகள் உள்ள நிலையில், இவை ஆக்ஸிஜனேற்றிகளாகவும் செயல்பட்டு செல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றதாம்.
image: istock
பானத்தை எவ்வாறு தயாரிப்பது?
அடுப்பில் பாத்திரம் ஒன்றினை வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். இதில் கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
கொதித்த தண்ணீர், வெதுவெதுப்பான வெப்பநிலைக்கு வந்த போது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.
தண்ணீர் சூடாக இருக்கும்போது எலுமிச்சை சேர்ப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் இவ்வாறு செய்வதால் வைட்டமின் சி சத்து பாதித்து கசப்பை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |