பெண்கள் ஏன் திருமணத்திற்கு லெகங்கா அணிகிறார்கள் தெரியுமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க!
ஆரம்ப காலங்களில் திருமண விழாக்களின் போது வட இந்திய பெண்கள் மாத்திரம் தான் லெகங்கா அணிவார்களாம்.
அப்படியே காலங்கள் செல்ல செல்ல தென்னிந்திய பெண்களும் திருமணத்தில் லெகங்கா அணிய ஆரம்பித்து விட்டார்கள்.
நீண்ட பாவாடை, வேலைப்பாடுகள் நிறைந்த ரவிக்கை, அதற்கேற்ற துப்பட்டா என இருந்த லெகங்காவில் தற்போது பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருமணத்தின் போது அணியப்படும் லெகங்கா வகைகளை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
லெகங்காக்களின் வகைகள்
1.படேல் லெகங்கா:
பேஷன் துறையில் அதிகமான பெண்களை கவரும் ஆடைகளில் இதுவும் ஒன்று. சங்கீத் போன்ற பகல்நேர திருமண நிகழ்வுகளில் ஜொலிக்க இது போன்ற ஆடைகள் அதிகமாக அணிகிறார்கள்.
அத்துடன் ஆர்கன்சா முதல் வெல்வெட் வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி படேல் லெகங்கள் தயாரிக்கப்படுகிறது.
2. மெட்டாலிக் லெகங்கா:
மாலைநேர நிகழ்வுகளில் தனித்து விளங்க வேண்டும் என பெண்கள் இந்த ஆடைகளை அணிகிறார்கள். இவ்வகை லெகங்கா பட்டு, புரோக்கேட் மற்றும் ஜார்ஜெட் போன்ற துணி ரகங்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.
மற்ற லெகங்காவை விட தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற உலோக நிறங்களில் தயாரிக்கப்படுவதால் இந்த லெகங்காக்கள் ஸ்பெஷலாக பார்க்கப்படுகின்றது.
3. அடுக்கு லெகங்கா:
இடுப்பு முதல் கால் வரை பல்வேறு அடுக்குகளாக தயாரிக்கப்படும் லெகங்கா தான் இது. டல்லே முதல் ஆர்கன்சா வரை பல்வேறு துணி ரகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது.
குறைந்த எடையுடன் இருக்கும் பெண்கள் இந்த ஆடைகளை அணிவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |