கேட்டாலே தலை சுற்றும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்திருக்கும் லெஜண்ட் சரவணன்
தொழிலதிபராகவும் நடிகராகவும் இருக்கும் லெஜண்ட் சரவணன் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்றுக் கேட்டால் தலையே சுற்றிப் போகும்.
லெஜண்ட் சரவணண்
லெஜண்ட் சரவணன் என்பது ஒரு நபரின் பெயர் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டில் ஒரு பிராண்ட். தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்புக்கு பெயர் பெற்றவர் லெஜண்ட் சரவணன், இவர் "நியூ லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்" என்ற வணிகத்தை நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார்.
இவர் தன் கடைகளுக்காக எடுக்கும் விளம்பரங்களுக்கு கூட டாப் ஹீரோயின்களுடன் இவரும் இணைந்து ஆடி அசத்தியிருப்பார்.
மேலும், தொழிலதிபராக மட்டுமல்ல கடந்த ஆண்டு 'தி லெஜெண்ட்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அடுத்த திரைப்படத்திலும் நடிக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
சொத்துமதிப்பு
இந்நிலையில், லெஜெண்ட் சரவணனின் சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி அனைவரையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது. லெஜெண்ட் சரவணன் சென்னையில் சொத்தமாக பல அடுக்குமாடிகள் கொண்ட கட்டிடத்துடன் பெரிய துணி கடை மற்றும் நகைக் கடை வைத்திருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சொந்தமாக பல வீடுகளும் வைத்திருக்கிறார். அவர் கட்டியிருக்கும் வீடுகள் எல்லாம் நவீக தொழிநுட்பத்துடன் வடிவமைத்து கட்டியிருக்கிறார். இந்த வீட்டில் 20இற்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கிறார்களாம்.
மேலும், இவரிடம் 10இற்கும் அதிகமான சொகுசு கார்கள் இருக்கிறதாம். இவர் நடத்தும் நிறுவனங்கள் மூலமும் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகிறார். இப்படி இவரின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பை பார்த்தால் கிட்டத்தட்ட 6000 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |