மீந்து போன சப்பாத்தியை வைத்து இத்தனை ரெசிபியா?
வீட்டில் மீந்து போன சப்பாத்தியை வைத்து பல வித ரெசிபியை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
காலை மற்றும் மாலை உணவில் அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிடும் உணவில் சப்பாத்தியும் ஒன்றாகும்.
ஆனால் சில தருணங்களில் சப்பாத்தி மீதமாகிவிட்டால் உடனே தூக்கி குப்பையில் போடும் நபர்களும் அதிகமே. இந்த பதிவில் அவ்வாறு குப்பையில் போடாமல் விதவிதமான ரெசிபி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
மீந்து போன சப்பாத்தியில் புது ரெசிபி
விரும்பிய காய்கறிகளோ அல்லது சிக்கன் அல்லது பன்னீரை நன்றாக வதக்கி சப்பாத்தின் மேல் பரப்பில் வைத்து சிறிது பொடியாக நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி இறுக்கமாக சுருட்டி சாப்பாத்தி ரோலாக சாப்பிடலாம்.
சப்பாத்தியை நூடுல்ஸ் போன்று வெட்டி, வெங்காயம், தக்காளி, மசாலா பொடி சேர்த்து வதக்கி நூடுல்ஸ் பதிலாக சப்பாத்தியை போட்டு கிளறினால் சாப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.
மீதமான சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அவற்றினை ருசியான சில்லி சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இது ஒரு சிறந்த காலை உணவாகும்.
மீதமான சப்பாத்தியின் மேல் சில காய்கறிகள் சீஸ் இவற்றினை சேர்த்து சப்பாத்தி பீட்சா தயார் செய்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |