லதா மங்கேஷ்கரின் உடல் தகனம்.... லீக்கான இறுதி பயண காட்சிகள்! கதறும் ரசிகர்கள்
பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சுமார் 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
#WATCH | State honour being given to veteran singer Lata Mangeshkar at Mumbai's Shivaji Park
— ANI (@ANI) February 6, 2022
(Source: DD news) pic.twitter.com/9fMvwyT9W6
மேலும், மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி உள்ளிட்ட பலரும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இந்திய திரையுலக பிரபலங்களும் லதா மங்கேஷ்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவருக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
மும்பை சிவாஜி பார்க்கில் மகாராஷ்டிரா அரசின் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.