அமெரிக்காவில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி! வெளியான நெகிழ்ச்சி வீடியோ
இந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், கடந்த 6ம் தேதி உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பை ப்ரீச் கவுண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லதா மங்கேஷ்கர் தொற்றிலிருந்து மீண்டாலும், வயது முதிர்வின் காரணமாக உடல் உறுப்புகள் பாதிப்படைந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 6ம் தேதி உயிரிழந்தார், இவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டதுடன், சிவாஜி பார்க்கில் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நியூயார்க்கின் டைம் சதுக்கத்தில் லதா மங்கேஷ்கருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
Ye Kahan Aa Gaye Hum என்ற பாடல் ஒலிக்க, லதா மங்கேஷ்கரின் புகைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பெருமையை உலகெங்கும் பறைசாற்றும் வண்ணம் இந்த அஞ்சலிக்கு ஏற்பாடு செய்ததாக Vikas Khanna என்பவர் தெரிவித்துள்ளார்.