TOP 10 Serial: முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?
பெரியதிரையை விட சின்னத்திரைக்கே ஒவ்வொரு வீட்டிலும் வரவேற்பு அதிகம், காலையில் தொடங்கி இரவு படுக்கைக்கு முன்பு வரை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சீரியல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இந்த சீரியல் என்ன நடந்தது? அந்த சீரியல் என்ன நடக்கப்போகிறது? என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி-யில் டாப் 10 சீரியல் எதுவென தெரிந்து கொள்ளலாம்.
10வது இடத்தை பிடித்திருக்கிறது விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல். (டிஆர்பி புள்ளிகள் 6.47
கடந்த வாரம் 8வது இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் 9வது இடத்தை பிடித்திருக்கிறது. (டிஆர்பி புள்ளிகள் 7.09)
கடந்த வாரம் 9வது இடத்தில் இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்-2 8வது இடத்தை பிடித்திருக்கிறது. (டிஆர்பி புள்ளிகள் 7.49)
கடந்த வாரம் 6வது இடத்தில் இருந்த மருமகள் சீரியல் இந்த வாரம் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. (டிஆர்பி புள்ளிகள் 7.88)
இந்த வாரம் அய்யனார் துணை சீரியலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. (டிஆர்பி புள்ளிகள் 7.93)
தொடர்ந்து மூன்று இடங்களுக்குள் மட்டுமே இருந்து வந்த கயல் சீரியல் பின்னுக்கு தள்ளப்பட்டு 5வது இடத்தை பிடித்துள்ளது, (டிஆர்பி புள்ளிகள் 8.15)
சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஒரு இடம் முன்னேறி நான்காம் இடத்தை பிடித்துள்ளது. (டிஆர்பி புள்ளிகள் 8.27)
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. (டிஆர்பி புள்ளிகள் 8.49)
இரண்டாம் இடத்தில் மூன்று முடிச்சு சீரியலும்(டிஆர்பி புள்ளிகள் 8.91), முதல் இடத்தை சிங்கப்பெண்ணே சீரியலும் பிடித்துள்ளது.( டிஆர்பி புள்ளிகள் 9.36)
