இந்த ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சி: இனி இந்த 4 ராசிகளுக்கும் பொற்காலம் ஆரம்பம்!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரகங்களின் தலைவனாகப் போற்றப்படுபவர் சூரிய பகவான். இவர் ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயர்வார். அதன் தாக்கமானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், தற்போது விருச்சிக ராசியில் சஞ்சரித்து வரும் சூரியன், டிசம்பர் 16ஆம் தேதி தனுசு ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். தனுசு ராசியின் அதிபதி குரு பகவான் என்பதும், இது 2026ஆம் ஆண்டின் இறுதி சூரிய பெயர்ச்சி என்பதும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றது.

இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிக்காரர்களிடமும் வெவ்வேறு விதமாக வெளிப்படும். குறிப்பாக, நான்கு ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாதகமான சூழல் உருவாகும்.
நீண்டகால உழைப்புக்கான பலன் கிடைப்பதுடன், மேற்கொள்ளும் முயற்சிகளிலும் வெற்றி தேடி வரலாம். அப்படியாக, 2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் பெறப்போகும் டாப் 4 ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 9ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், பணியிடத்தில் புதிய முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவும், உங்களின் பணிக்கு பாராட்டும் கிடைக்கும்.
வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகி, நிதி நிலை மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குறிப்பாக நிதி நி்லையில் இருவரை காலமும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், நிதி ரீதியாக நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைப்பதுடன், திட்டமிட்ட காரியங்களும் வெற்றியடையும்.
கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் முக்கியமான காரியங்களைச் சாதிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிர்ஷ்டமும் உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.
கன்னி

கன்னி ராசியின் 4ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், சிலருக்குப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.
வியாபாரிகளுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, பொருளாதார நிலை வலுப்பெறும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் அமையும்.
மீனம்

மீன ராசியின் 10ஆவது வீட்டிற்கு சூரியன் செல்வதால், அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதுடன் தொழிலில் அமோக வளர்ச்சி ஏற்படும்.
வேலை நிமித்தமாகப் பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். மாணவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |