மயில் இறகில் இப்படி ஒரு சக்தியா? அறிவியலாளர்களையே மிரள வைத்த ரகரியம்!
பொதுவாகவே அனைவரும் சிறுவயதில் மயில் இறகுகளை வைத்து விளையாடியிருப்போம். இதன் வசீகரிக்கும் அழகுக்கு அடிமையாகத சிறுவர்கள் மிகவும் அரிது.
மயில்கள் தங்கள் பிரகாசமான வண்ண இறகுகளில் ஒரு ரகசியத்தை மறைத்து வைத்திருக்கின்றன என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
புதிய கண்டுப்பிடிப்பு
ஆம் சமீபத்தில், சமீபத்தில் நடந்த புதிய ஆய்வில், மயில்களின் தோகையில் லேசர் ஒளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயில் இறகில் இருக்கும் சிறிய பிரதிபலிப்பு கட்டமைப்புகள், ஒளியை லேசர் கற்றையாகப் பெருக்க முடியும். இறகுகளை சாயமிட்ட பின்னர், அவை மஞ்சள்-பச்சை லேசர் ஒளியின் குறுகிய கற்றைகளை வெளியிடுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மயில்கள் தங்களின் தோகையைப் பயன்படுத்தி ஒளியை உருவாக்குகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவற்றின் தோகையிலுள்ள குறிப்பிட்ட பகுதிகள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான லேசர் ஒளியை உருவாக்கும் திறன் கொண்டவை என்பது அறிவியல் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா பாலிடெக்னிக் பல்கலைக்கழகம் (Florida Polytechnic University) மற்றும் யங்ஸ்டவுன் மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், மயிலின் தோகையில் உள்ள சிறப்புப் பகுதிகளில் ஒரு சாயத்தைப் பயன்படுத்திப் பரிசோதனை செய்த போது, வழக்கமான ஒளியின் பிரதிபலிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான ஒளியை, இந்தச் சாயங்கள் வெளியிடுவதை கவனித்துள்ளார்கள்.
LASER என்பது ஒளியை அதிகரிக்கச் செய்யும் ஒரு முறை. சில பொருள்கள் அல்லது சாயங்களின் மீது ஒளியைப் பாய்ச்சும்போது, அவை கூட்டாக ஒளியை வெளியிட்டு, லேசர் ஒளியை உருவாக்குகின்றன.
இது இயற்கையில் மிகவும் அரிதான நிகழ்வாகும். ஆனால் மயிலின் தோகையில் லேசர் ஒளி உருவாவதற்கு, ஆப்டிகல் கேவிட்டி (optical cavity) எனப்படும் ஒரு சிறப்பு அமைப்பு இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பானது லேசர் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் மேம்படுத்துவதற்கும் பெருமளவில் துணைப்புரியும் எனவும்,உயிரியல் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கும் ஒரு புதிய கருவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |