உங்கள் லேப்டாப் சார்ஜ் ஆகவில்லையா.? இதை மட்டும் செய்தால் போதும்
நாம் பயன்படுத்தும் மடிக்கணினியில் சரியாக சார்ஜ் ஆகாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் இங்கு தெரிந்து கொள்வோம்.
லேப்டாப் சார்ஜ் ஏறுவதில் சிரமம்
இன்று பலரது கையில் எளிமையாக இருப்பது லேப் டாப் தான். பல இளைஞர்கள் இதனை வைத்து வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.
அற்த அளவிற்கு அனைத்து வசதிகளுடன் வீட்டில அமர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வாறு வேலை செய்வதால் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லாமல் காணப்படுகின்றது.
ஆம் வீடுகளில் மடிக் கணினியை வைத்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் சில தருணங்களில் மடிக் கணினியும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் சரியாக சார்ஜ் ஏறாமல் இருப்பது. இந்த பிரச்சினை செலவு இல்லாமல் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பிரச்சினையை எவ்வாறு சரிசெய்யலாம்?
பவர் அடாப்டரைச் சொருகி, சுவிட்சை சரியாக போட்டுள்ளோமோ என்று முதலில் சரி பாருங்கள். இரண்டாவதாக, லேப்டாப்பின் சார்ஜிங் போர்ட்டில் சார்ஜிங் பின்னை சொருகி இருக்கிறோமா ? என்று சரி பாருங்கள்.
இந்த பிரச்சனைக்கு முதல் காரணமாக சார்ஜர் இருக்கலாம். லேப்டாப் மற்றும் பவர் அவுட்லெட்டில் சார்ஜர் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். ஏதேனும் சேதம் இருக்கிறதா என்பதை சரிபார்க்கவும். கேபிள் சேதமடைந்தால், அதை மாற்றவும்.
மடிக்கணினி முழுமையாக அல்லது சரியாக சார்ஜ் செய்யாததற்கு சார்ஜிங் போர்ட் காரணமாக இருக்கலாம். போர்ட்டில் அழுக்கு இருக்கிறதா என்று சோதிக்கவும்.
காலப்போக்கில் பேட்டரி சிதைவடைய வாய்ப்பு உண்டு. உங்கள் மடிக்கணினி ஓரிரு வருடங்கள் பழையதாக இருந்தால், பேட்டரி சார்ஜ் செய்ய முடியாத அளவுக்கு சிதைந்திருக்கலாம். சிறந்த கம்பெனி பேட்டரியாக மாற்றவும்.
சில மால்வேர்கள் பேட்டரியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். தீங்கிழைக்கும் இதுபோன்ற மால்வேர்கள் கோப்புகளை அகற்றவும். வைரஸ் ஸ்கேன் செய்யவும்.